Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாம் - முதலமைச்சர் திறப்பு

    முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாம் – முதலமைச்சர் திறப்பு

    தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக முதல் முறையாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைக்கப்பட்டது .

    தமிழகத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ,அதோடு நின்று விடாமல் அவர்களுக்கென்று கல்வி உதவிகள் அதிகரிப்பு,வாழ்வாதார உதவிகள் அதிகரிப்பு , விலையில்லா அரிசி ,அகதிகளுக்கான ஆலோசனைக் குழு உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்திருந்தார் .

    இதையும் படிங்க: ‘மதுக்கடைகளை  மூடினால் தான் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்’ – அன்புமணி வருத்தம்

    அதன்படி முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுத்தில் ரூ 17 கோடியே 17 லட்சம் செலவில் கடந்த 8 மாதத்தில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நிலையில் ,இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது . தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்ட இந்த வீடுகளில், உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன.

    இப்படி பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த வீடுகளை முதல்வர் இன்று திறந்து வைத்து இலங்கை தமிழர்களுக்காக கொடுத்திருப்பது அந்த மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது .

    தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு எச்சரிக்கை.. தேர்தல் ஆணையம் போட்ட புதிய கிடுக்கிப்பிடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....