Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசெஸ் ஒலிம்பியாட்: நுழைவுச்சீட்டு விற்பனையில் சாதனை!

    செஸ் ஒலிம்பியாட்: நுழைவுச்சீட்டு விற்பனையில் சாதனை!

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் கிடைத்துள்ளது. 

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு, அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் இணையத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த செஸ் போட்டியானது இரு அரங்குகளில் நடைபெறுகிறது. 

    அதன்படி, பெரிய அரங்கில் நடைபெறும் போட்டிகளைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு ரூ.300 முதல் ரூ.8000 வரை விற்கப்படுகிறது. அதேபோல், சிறிய அரங்கின் நுழைவுச்சீட்டு விலை ரூ.200 முதல் ரூ.6000 வரை விற்கப்படுகிறது. பெரிய அரங்கில் தரவரிசையின்படி முன்னணியில் உள்ள அணிகளின் வீரர்கள் பங்கேற்பார்கள்.

    மேலும், ரூ.200, ரூ.300 நுழைவுச்சீட்டுகள் பெண்கள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதில், சேராத இந்தியர்கள் ரூ.2000, ரூ.3000 விலையில் உள்ள நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம். வெளிநாட்டவர்களுக்கு ரூ.6000, ரூ.8000 விலையில் உள்ள நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரு அரங்குகளிலும், 700 பேர் வரையிலான பார்வையாளர்களே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், ரூ.200 மற்றும் ரூ.300 நுழைவுச்சீட்டுகளை வாங்குபவர்கள் அரங்கில் இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதிகக் கட்டணங்களைக் கொண்ட நுழைவுச்சீட்டுகளை வாங்குபவர்கள் போட்டியை முழு நாளும் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. 

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நுழைவுச்சீட்டு விற்பனை மற்றும் விளம்பரச் செயல்பாடுகளின் தலைவரான பிரஃபுல் ஸவேரி, செஸ்பேஸ் இந்தியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அப்பேட்டியில், அவர் கூறியதாவது:

    சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இந்தளவுக்கு இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் இதுவரை ரூ.40 லட்சம் வருமானமாகக் கிடைத்துள்ளது. 

    மேலும், 3,700-க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை விடவும் இந்தமுறை நுழைவுச்சீட்டு விற்பனை அதிகரித்துள்ளது. இதன்மூலம், வருமானத்தில் புதிய சாதனை படைப்போம் என எதிர்பார்க்கிறோம். 

    நுழைவுச்சீட்டு விற்பனை வருமானத்தில் விரைவில் ரூ.50 லட்சத்தை நெருங்க உள்ளோம். மேலும், ரூ.75 லட்சத்தை அடைவோமா என இனிமேல் தான் தெரியும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற செஸ் போட்டிகளில் வென்ற மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள். இதன்படி, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வந்த 350 மாணவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

    இவ்வாறு, பிரஃபுல் ஸவேரி தெரிவித்துள்ளார். 

    20,000 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம்; என்ன சொல்கிறார் மு.க.ஸ்டாலின்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....