Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை'- பாஜக அண்ணாமலை

    ‘இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை’- பாஜக அண்ணாமலை

    இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பாஜக அரசு கையில் எடுத்திருக்கிறது. இதனால், இந்தி மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு மத்திய அரசு வழிவகுத்துள்ளது. இந்த இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல், கேரளா, தெலுங்கானா மாநிலங்களும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (அக்டோபர் 13) சென்னை திரும்பினார். 

    இதையும் படிங்க:உயர்மட்ட தலையீடுகள்’ அதிகம்.. நயன்தாரா – விக்னேஷ்சிவன் தம்பதியிடம் விசாரணை நடத்தப்படுமா?

    அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:

    இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை. இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால், தமிழக பாஜக எதிர்க்கும். யார் இந்து, யார் இந்து இல்லை என்று கண்டுபிடிப்பது தான் தற்போது ஃபேஷன் ஆக உள்ளது. 

    காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. காங்கிரஸ் இந்தி மொழியை திணித்த போது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. மத்திய அரசு 3 மொழியை படிக்க வேண்டும் என்று சொல்லி வருகின்றது. 

    இந்தி கற்பதில் தமிழகம் “சி” நிலையில் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தூங்கவிடுங்க என திமுகவினருக்கு வேண்டுகோள் வைக்கின்றேன். 

    இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....