Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்ட பலர் மீது வழக்குப்பதிவு

    கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்ட பலர் மீது வழக்குப்பதிவு

    கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்ட பலர் மீது 10-க்கும் மேற்பட்ட
    பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, நான்கு நாள்களாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் மறியல் நடைபெற்ற இடத்தில் உடனடியாக குவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினரும் அத்தனியார் பள்ளி அருகே, கடந்த ஞாயிறு காலை சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் போராட்டம் வலுத்தது.

    இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்பை மீறி பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தனர்.

    பள்ளிக்குள் நுழைந்தவர்கள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் காவல்துறையினர் பலர் காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்தனர்.

    வன்முறை கட்டுக்கடங்காமல் செல்ல கூடுதலாக 500 அதிரடிப்படை வீரர்கள்
    வன்முறை நடைபெற்ற சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குவிக்கப்பட்டனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகு வன்முறையாளர்களை விரட்டியடித்த அதிரடிப்படையினர், கடந்த ஞாயிறு பிற்பகல் 3.30 மணியளவில் பள்ளி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த வன்முறையின் போது காவல்துறையினர் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்த வன்முறையில்
    ஈடுபட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

    இந்த வன்முறை தொடர்பாக நேற்று காலை வரை 329 பேரை கைது
    செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வன்முறையில்
    ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார்
    வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து காணொளி ஆதாரங்களின் அடிப்படையில்
    வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி வன்முறை திட்டமிட்ட செயல் – உயர்நீதிமன்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....