Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிபத்தை தடுக்க பள்ளி பேருந்துகளில் இது கட்டாயம்: தமிழக அரசிதழில் வெளியான அதிரடி உத்தரவு

    விபத்தை தடுக்க பள்ளி பேருந்துகளில் இது கட்டாயம்: தமிழக அரசிதழில் வெளியான அதிரடி உத்தரவு

    பள்ளி வாகனங்களில் கேமரா மற்றும் சென்சார் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டுமென தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது. 

    பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் பள்ளி வாகனங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர வேண்டும். அதற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இதைத்தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    அவற்றுள் ஒன்றாக, தற்போது தமிழக அரசு புது உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அந்த உத்தரவில்
    கூறப்பட்டுள்ளது.

    மேலும், இதன் அடுத்தக்கட்டமாக, மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு, கடந்த ஜூன் 29-ம் தேதி உள்துறைச் செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: நாட்டில் வேலைக்கும் செல்லும் பெண்களின் சதவீதம் எவ்வளவு தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....