Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'மக்களவை அதிமுக தலைவர் ரவீந்திரநாத்' - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அழைப்பால் சலசலப்பு!

    ‘மக்களவை அதிமுக தலைவர் ரவீந்திரநாத்’ – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அழைப்பால் சலசலப்பு!

    நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்க ரவீரந்தர நாத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். 

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். இதையடுத்து இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. மேலும் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் தாக்கல் செய்ய உள்ளார். 

    இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். 

    அந்த வகையில், அனைத்து கட்சி தலைவர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்க அதிமுக சார்பில் கலந்து கொள்வதற்காக தேனி தொகுதி மக்களவை உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத்திற்கு பிரல்ஹாத் ஜோஷி அழைப்புவிடுத்து இருக்கிறார். இதில் மக்களவை அதிமுக தலைவர் ரவீந்திரநாத் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    தற்போது, அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், ரவீந்திரநாத்தின் அதிமுக மக்களவை உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்யக்கோரி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து சபாநாயகர் முடிவெடுக்காமல் இருப்பதால், அதிமுக மக்களவை உறுப்பினராகவே ரவீந்திரநாத் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; கல்லூரி மாணவர் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....