Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை: நாக் அவுட்டிற்கு முன்னேறிய பிரேசில்...

    கால்பந்து உலகக் கோப்பை: நாக் அவுட்டிற்கு முன்னேறிய பிரேசில்…

    கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது, பிரேசில் அணி. 

    கத்தாரில் தற்போது கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் விறுவிறுப்பை ஏற்றிக் கொண்டே செல்கிறது. தினந்தோறும் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

    இந்த நான்கு லீக் ஆட்டங்களில் ஒன்றாக நேற்று பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதி கோலின்றி முடிந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியில் 83-ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் கேஸ்மிரோ கோலடித்தார். 

    இதைத்தொடர்ந்து, சுவிட்சர்லாந்து எந்தவித கோல்களையும் அடிக்காமல் இருக்க, ஆட்டத்தின் இறுதியில் 1-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், குரூப் சுற்றின் 2 ஆட்டங்களிலும் வென்ற பிரேசில், பிரான்ஸைத் தொடர்ந்து 2-ஆவது அணியாக நாக்அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.

    மற்ற ஆட்டங்கள்

    கேமரூன் மற்றும் செர்பியாவுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் தலா மூன்று கோல்கள் அடிக்க ஆட்டம் சமனில் முடிந்தது. 

    சவுத் கொரியா மற்றும் கானா மோதிய ஆட்டத்தில், கானா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.

    மேலும், போர்ச்சுகல் மற்றும் உருகுவே அணிகள் மோதிட ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து போர்ச்சுகல் 2-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

    தமிழகத்தில் கனமழையால் இன்று மூன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....