Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபாஜகவிற்கு சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனங்கள்.. செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா பணியிடை நீக்கம்..

    பாஜகவிற்கு சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனங்கள்.. செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா பணியிடை நீக்கம்..

    தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டியளித்தபோது இஸ்லாம் மதத்தினையும், முகமது நபி பற்றியும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா பேசியுள்ள சம்பவம் பெரிய பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் பாஜக கட்சியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நுபுர் கூறிய சர்ச்சைக் கருத்துகள் குறித்து அரபு நாடுகள் தங்களது கண்டனத்தினைக் கூறி வருகின்றன.

    ‘நுபுர் ஷர்மாவின் கருத்துக்கள் தவறானது, இது இஸ்லாம் மதத்திற்கு அவமரியாதையை உண்டாக்குகின்றன. மற்ற மதத்தின் நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’  என்று சவுதி அரேபியா தனது கருத்தினைக் கூறியுள்ளது.

    கத்தார் மற்றும் குவைத் நாட்டுக்கான இந்தியாவின் வெளியுறவுத் தூதரகமானது, ‘நுபுர் ஷர்மாவின் இந்த கருத்துகள் அவரது சொந்த கருத்துக்களே. இது எந்த விதத்திலும் இந்திய அரசாங்கத்தின் பொதுப்பார்வை அல்ல.’ என்று கூறியுள்ளது.

    ‘ இந்தியாவானது பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான வரலாற்றினைக் கொண்டுள்ளது. இங்கு பல விதமான சமூகக் கட்டமைப்புகள், பாரம்பரியங்கள் எந்த விதமான வேற்றுமையும் இன்றி ஒன்றுடன் ஒன்று பிணைந்து காணப்படுகிறது. அனைத்து மதத்தின் மீதும் இந்திய அரசாங்கமானது பெரிய மரியாதையினை வைத்துள்ளது.’ என்றும் கூறியுள்ளது.

    கான்பூர் கலவரம்..

    நுபுர் ஷர்மாவின் இந்த பேச்சினைக் கண்டித்து உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.  இதன் படி கான்பூர் சந்தையில் பாதியளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வெளியில் வந்த முஸ்லிம்கள், திறந்திருந்த கடைகளை மூடச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 1000 பேர் கொண்ட கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

    எதிர் தரப்பும் தாக்குதலில் ஈடுபட, பெரிய கலவரம் அந்தப் பகுதியில் உருவானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசி போராட்டத்தினைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்றும் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையில், காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். 1000 பேர் வரை தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    நுபுர் ஷர்மாவின் இந்த பேச்சு தற்போது நாட்டுமக்களிடையே பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. இது குறித்து ட்விட்டர் வலைதளத்தில் பலவிதமான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....