Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பாஜக தலைவரின் மனைவி; பதட்டமான கிராம மக்கள்

    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பாஜக தலைவரின் மனைவி; பதட்டமான கிராம மக்கள்

    உத்தர பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாஜக தலைவர் மனைவி உயிரிழந்தார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் மொரதாபாத்தில் கனிமவளக் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர் சபர். இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் இவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசு தரப்படும் என உத்தரப் பிரதேச காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜஸ்பூர் கிராமத்தில் வசித்து வரும் பாஜக உள்ளூர் தலைவர் குர்தாஜ் புல்லரின் பண்ணை வீட்டில் சபர் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு நேற்று (அக்டோபர் 13) தகவல் கிடைத்தது. இதன் காரணமாக காவல்துறையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். 

    திடீரென வீட்டை சுற்றி வளைத்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல்துறையினரை தாக்கினர். இதனால், காவல்துறையினர் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதையும் படிங்க: உலகக் கோப்பையில் இந்திய அணி….நம்ம அணியோட ஆட்ட நேரங்களும் தேதிகளும் தெரியுமா?

    இதில் பாஜக தலைவர் குர்தாஜ் புல்லரின் மனைவி குர்பிரீத் கவுர்(28) மீது குண்டு பாய்ந்தது. அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 

    மேலும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

    இதில் 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். மேலும், 4  காவலர்களை கிராம மக்கள் பிணைக்கைதிகளாகப் பிடித்ததுடன், அவர்களிடமிருந்த துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் வாங்கி வைத்துக் கொண்டனர். 

    காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. 

    இதனிடையே, உத்தர பிரதேச காவல்துறை மீது உத்தராகண்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

    பாஜக தலைவர் மனைவி கொல்லப்பட்டதால், ஜஸ்பூர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....