Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த வழக்கில் காவல்துறை அதிரடி..

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த வழக்கில் காவல்துறை அதிரடி..

    தமிழக முதலமைச்சரை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவு செய்ததாக சமூக ஊடகவியலாளர் கிஷோர் கே சாமி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

    பாஜக ஆதரவாளரும், சமூக ஊடகவியலாளருமாக விளங்கி வருபவர், கிஷோர் கே சாமி. இவர் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையில், நவம்பர் 1-ஆம் தேதி இரவு ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இவரின் இந்தப் பதிவு பெரும் வைரலாகியது. 

    இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜாராகவில்லை. 

    மாறாக, கிஷோர் கே சாமி முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அனுகினார். இந்த மனுவானது, நீதிபதி எஸ்.அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, கிஷோர் கே சாமி தனது நண்பரை மட்டுமே குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. 

    மேலும், காவல்துறை தரப்பில் கிஷோர் கே சாமி மீது இப்படியாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவரும் இதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, ‘ விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பிய நோட்டீஸிற்கு ஆஜராகாதவருக்கு, முன்ஜாமீன் வழங்குமானால், அது இந்த சமூகத்திற்கு தவறான தகவலை தெரிவிப்பதாகவிடும் எனக் கூறி கிஷோர் கே சாமியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

    இச்சூழலில், இன்று அதிகாலை பாண்டிச்சேரியில் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    ஒரு மாதத்திற்குள் 1.5 லட்சம் பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு..! அமைச்சர் சொன்ன புதிய தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....