Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபுரோ கபடி; வெற்றிக்கனியை எட்டிய பெங்களூர், குஜராத்

    புரோ கபடி; வெற்றிக்கனியை எட்டிய பெங்களூர், குஜராத்

    நேற்று நடைபெற்ற புரோ கபடி போட்டியில் பெங்களூர் புல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் வெற்றிப்பெற்றன. 

    புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

    இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் உத்தரபிரதேச யோதாஸ் மற்றும் பெங்களூர் புல்ஸ், யு மும்பா மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆட்டங்கள் நடைபெற்றன. 

    இந்த ஆட்டங்களில் பெங்களூர் புல்ஸ் அணி 38-35 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோதாஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, யு மும்பா மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையே நடைபற்ற ஆட்டத்தில், 38-36 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் வெற்றி பெற்றது. 

    மேலும், இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள புரோ கபடி போட்டியில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் மற்றும் பாட்னா பைரேட்ஸ், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய அணிகள் களம் காண உள்ளன. 

    “நான் உடற்தகுதியுடன்தான் இருக்கிறேன்” – கேலிகளுக்கு பதிலளித்த மஞ்சிமா மோகன்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....