Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்

    தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்

    தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 5-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. அதன்படி இன்று தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ,தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி நகரக்கூடும். மேலும் வடமேற்கு திசையில் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் டிசம்பர் 7 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொள்கிறது.இது டிசம்பர் 8-ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும்,அப்படி புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு ‘மாண்டஸ்’ என பெயரிடப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

    வானிலை அமைப்பு தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தென் கடலோரப் பகுதிகளில் டிசம்பர் 7 ஆம் தேதி இரவு தொடங்கி அடுத்த நாள் மழை தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுளள்து .

    டிசம்பர் 4 முதல் 6 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    டிசம்பர் 4-ம் தேதி லட்சத்தீவிலும், கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலும் தனித்தனியான கனமழை பெய்யக்கூடும்.

    வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடற்பகுதியை அடுத்த சில நாட்களுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என (ஐஎம்டி) இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் டிசம்பர் 7 முதல் 9 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     இந்நிலையில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நேற்று (டிச 04) பெய்த மழையால் நகரின் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

    “நான் உடற்தகுதியுடன்தான் இருக்கிறேன்” – கேலிகளுக்கு பதிலளித்த மஞ்சிமா மோகன்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....