Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தேர்தல் ஆணையம்: வாக்காளர் பட்டியல் பார்வையாளராக 10 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்..!

    தேர்தல் ஆணையம்: வாக்காளர் பட்டியல் பார்வையாளராக 10 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்..!

    இந்தியத் தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்துள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும் பொதுமக்களைச் சந்தித்து வாக்களர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தால் புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 01.01.2023 தேதியினை தகுதியாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை கண்காணிக்கும் பொருட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்துள்ளது.

    இவ்வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் சுருக்க முறை திருத்தப் பணிகளை, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைந்தது மூன்று முறையாவது பயணம் மேற்கொண்டு, மேற்பார்வையிட்டு, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்துவதோடு, பொதுமக்களைச் சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்வர். அவர்களின் ஆய்வுக்குப் பின்னர், தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்புவர்.

    இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நாட்களான 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022-இல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து வாக்களர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....