Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு ஆஸ்கரா? பிரபல இயக்குநர் சொன்ன பதில்

    ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு ஆஸ்கரா? பிரபல இயக்குநர் சொன்ன பதில்

    ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க 99 சதவிகித வாய்ப்பு உள்ளதாக பாலிவூட் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    பாகுபலி திரைப்படத்துக்கு பிறகு இந்திய அளவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

    இந்நிலையில், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தனது டோபரா பட நிகழ்வில் பேசிய அனுராக், “ஹாலிவுட்டில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டால், அந்தப் படம் ஆஸ்கர் வெல்ல 99 சதவிகித வாய்ப்பி இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....