Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கோமாளி அரசியல்வாதி அண்ணாமலை: கடுமையாக விமர்ச்சித்த திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி

    கோமாளி அரசியல்வாதி அண்ணாமலை: கடுமையாக விமர்ச்சித்த திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி

    தமிழக அரசு மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து அது தொடர்பான ஆதாரங்களை வெளியிடப்போவதாக அண்ணாமலை நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். 

    இதையடுத்து அண்ணாமலையின் அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செய்தித்தொடர்பாளர் ராஜிவ் காந்தி பேசியதாவது:

    தினமும் தனக்கு அறிக்கை வேண்டும் என்ற முறையில் தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தினந்தோரும் அறிக்கை விட்டுக்கொண்டு ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையில் அண்ணாமலை இறங்கியுள்ளார்.

    கார் வெடிப்பில் அண்ணாமலை அரசியல் செய்கிறார். இன்று (நேற்று) மதியம் வந்த அறிக்கை காவல்துறையை களங்கப்படுத்துவதாகவும், காவல்துறையை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது. ஜமேசா முபின் குறித்த எந்த கடிதமும் தமிழக அரசுக்கு மத்திய அரசால் அனுப்பப்படவில்லை.

    பாதுகாப்பை அதிகப்படுத்த மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசின் அறிக்கையை அண்ணாமலைக்கு ஒரு அதிகாரி வழங்கியது போலவே, எனக்கும் வழங்கப்பட்டது.

    இதையும் படிங்க: “செம்மொழியான நம் ஆதி தமிழ் மொழி” சிதைந்து போனதா..? தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரஷ்யமான தகவல்கள்

    கோவையில் 23 ஆம் தேதி காலை நான்கு மணிக்கு விபத்து நடந்ததாக சொல்லப்படும்போது முதலில் சென்று எரிந்த அந்தக் காரை கைப்பற்றிய காவல்துறை நண்பர், அவர் எந்த ஜாதி, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்குமே தெரியாது. தன்னுடைய உயிரை பணயம் வைத்து தனது காவல்துறை வேலையை செய்த காவல் அதிகாரிகளை இந்த சாதி, இந்த மதம், அதனால் சரியில்லை என அண்ணாமலை உளறி வருகிறார். 

    உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால், பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, கோவை பகுதி மத அடிப்படைவாதிகளுடைய ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான பின், ஒரு அரசியல் கட்சியாக ஒரு சம்பவம் நடந்தால், அந்த மக்களிடம் சென்று விளக்க வேண்டியதும், மக்கள் சமூக நல்லிணக்கம் பெற இணக்கமான சூழலை கொண்டு வருவதுதான் அரசியல் கட்சியின் வேலை.

    ஆனால், அதற்கு மாறாக கோமாளித்தனமாக பந்த் நடத்துகிறோம்; யாரும் தொழில் செய்ய வேண்டாம்; கடையை தீர்க்க வேண்டாம் என்றால், இன்னைக்கு இருக்கக்கூடிய சூழலில் சென்னைக்கு அடுத்து வளர்ந்து வரக்கூடிய தொழில் நகரமான கோவையில் இனிமேல் யாரும் தொழில் செய்ய வேண்டாம் என்பது போல், கோவையை எப்போதும் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக பதற்றமாக வைத்திருக்கக்கூடிய அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவம் இல்லாதவர்களுடைய செயல் மிகவும் வெட்கக்கேடான செயல் ஆகும். 

    மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமையும் இந்த வழக்கை நடத்துகிறது. ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகின்றது. ஆனால் பிரதமர் மோடி இதுவரை ஏன் பேசவில்லை என்ற கேள்வி கேட்டால் எப்படி பால்வாடித்தனமாக இருக்குமோ அது போன்ற பால்வாடித்தனமான அரசியலைத் தான் அண்ணாமலை செய்து வருகிறார். 

    திமுக மீது அண்ணாமலை வைக்கும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை. அண்ணாமலை தனது சொந்த கட்சி தேவைக்காக மாநிலத்தை பதற்றமாக வைத்துள்ளார். 

    இவ்வாறு அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், இன்று (அக்டோபர் 31) அண்ணாமலை அறிக்கையுடன் சில ஆதரங்களையும் வெளியிட்டுள்ளார். 

    அதேபோல், அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடுமையான விமர்சன மோதல்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

    இதையும் படிங்க: கூட்ட நெரிசல் சிக்கி 120 பரிதாப பலி! ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நடந்த சோகம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....