Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இங்க மட்டும் இல்ல.. எங்க போனாலும் வைரல் தான்! அண்ணாமலை

    இங்க மட்டும் இல்ல.. எங்க போனாலும் வைரல் தான்! அண்ணாமலை

    அமெரிக்காவுக்கு சென்றுள்ள அண்ணாமலையின் புகைப்படங்கள் மற்றும் அவரைப் பற்றிய தகவல்கள் தற்போது பேசும் பொருளாக உலாவிக் கொண்டு வருகிறது.

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 2 வார கால பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இவர் உயர்கல்வி தொடர்பாக அமெரிக்க சென்றதாகவும், இது அவரது தனிப்பட்ட பயணம் என்றும் கூறப்பட்டது. 

    அதே சமயத்தில், இரண்டு வாரம் கட்சி பயணமாக அண்ணனும் நானும் அமெரிக்கா செல்கிறோம் என பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

    இதனால், அண்ணாமலையின் பயணம் தனிப்பட்ட பயணமா? அல்லது கட்சி சார்ந்த பயணமா? என்ற கேள்விகள் பலரிடையே எழுந்தன. இதன் காரணமாக, அண்ணாமலை அமெரிக்கா செல்வது அரசியல் சார்ந்த விஷயங்களிலும் ஈடுபடலாம் என தகவல்கள் வெளியாகின. 

    bjp

    இதனிடையே அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘நான் எனது பில்லோவ்ஷிப் படிப்பு காரணங்களுக்காக அமெரிக்காசெல்கிறேன். 13 ஆம் தேதி வரை அங்கு இருப்பேன்’ என தெரிவித்துள்ளார். 

    தமிழகத்திலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி அண்ணாமலை அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள முயர் வூட்ஸ் தேசிய நினைவு சின்னத்தை பார்க்க சென்றார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இப்போது வேகமாக பரவி வருகிறது. 

    bjp

    ஒரு சிறிய குடும்பத்தை அண்ணாமலை செல்போனில் புகைப்படம் எடுக்கிறார். அவர் எடுக்கும் அந்த சமயத்தில் இவரையும் சேர்த்து எடுத்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது.

    bjp

    இதையும் படிங்க:இனி போன் வந்தால் ‘ஹலோ’க்கு பதில் ‘வந்தே மாதரம்’ சொல்லணும்! அரசு ஊழியர்களுக்கு உத்தரவு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....