Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபொறியியல் கல்லூரிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

    பொறியியல் கல்லூரிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

    பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவும் வகையில் 481 கல்லூரிகள் அடங்கிய இந்த பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

    பொறியியல் கல்லூரிகளில்  முதல் வருட சேர்க்கைக்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், 481 கல்லூரிகள் அடங்கிய தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

    கடந்த ஐந்து வருடங்களில் எடுத்த தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 481 கல்லூரிகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில், கணினி அறிவியல் பொறியியல் பிரிவில் சேர்ந்த மாணவர்களின், கட்-ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படியில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் பெருமளவு மாணவர்கள் கணினி அறிவியல் பிரிவில் சேர்ந்துள்ளனர். எனவே இந்த தரவரிசைப் பட்டியலுக்கு கணினி அறிவியல் பாடம் அடிப்படை தரவாக எடுக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் 481 கல்லூரிகளில் கணினி அறிவியல் பிரிவில் சேர்ந்த மாணவர்களின் சராசரி கட்-ஆஃப் மதிப்பெண்ணை வைத்து இந்த தரவரிசை பட்டியலை நாங்கள் தயாரித்துள்ளம்.’

    ‘சர்வதேச அளவில் சிறந்த பல்கலைக் கழகங்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்தும் அளவீடுகளையும் பயன்படுத்தியுள்ளோம்.’ எனக் கூறியுள்ளார்.

    இந்த தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் நான்கு கல்லூரிகள்:

    1. சென்னை அண்ணா பல்கலைக்கழகம்-கடந்த ஐந்து ஆண்டுகளில் கணினி அறிவியல் பிரிவில் சேர்ந்தவர்களின் சராசரி கட் ஆஃப் மதிப்பெண்- 200க்கு 198.90
    2. சென்னை தொழில்நுட்ப நிறுவனம்- கடந்த ஐந்து ஆண்டுகளில் கணினி அறிவியல் பிரிவில் சேர்ந்தவர்களின் சராசரி கட் ஆஃப் மதிப்பெண்- 200க்கு 196.96
    3. பிஎஸ்ஜி கல்லூரி, கோயம்புத்தூர் -கடந்த ஐந்து ஆண்டுகளில் கணினி அறிவியல் பிரிவில் சேர்ந்தவர்களின் சராசரி கட் ஆஃப் மதிப்பெண்- 200க்கு 196.65
    4. எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி, சென்னை- கடந்த ஐந்து ஆண்டுகளில் கணினி அறிவியல் பிரிவில் சேர்ந்தவர்களின் சராசரி கட் ஆஃப் மதிப்பெண்- 200க்கு 195.50

    இந்த தரவரிசைப் பட்டியலில், முதல் 100 இடங்களில் உள்ள கல்லூரிகளில் 23 அரசு கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது. தனியார் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில், அரசு கல்லூரிகளில் படிப்பதற்கு குறைவான கட்டணமே செலவாகிறது. இதன் காரணமாக பெரும்பாலானான மாணவர்கள் அரசு மற்றும் அரசின் கீழுள்ள கல்லூரிகளை தேர்வு செய்ய அதிகம் விரும்புகின்றனர்.

    மேலும் நகருக்கு வெளிப்புறமுள்ள கல்லூரிகளைக் காட்டிலும் நகரில் உள்ள கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் விரும்புவதும் குறிப்பிடத்தக்கது. இந்த தரவரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு; மருத்துவமனையில் அனுமதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....