Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாமக தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை; அன்புமணி ராமதாஸ்

    பாமக தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை; அன்புமணி ராமதாஸ்

    பாட்டாளி மக்கள் கட்சி தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். 

    நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே மணி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 % வேலை வழங்குவதற்கான தனிச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறினார். 

    தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், டெல்டா மாவட்டங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பழக்கம் அதிகமாக இருப்பதாகவும், அதை  தடுப்பதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் போதுமான காவல்துறையினர் இல்லாததால் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், இதனால் போதை தடுப்பு பிரிவுக்கு 20 ஆயிரம் காவல்துறையினரை பணியமர்த்த வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் இளைய சமுதாயம் சீரழிந்துவிடும் என்றும் கோரிக்கை வைத்தார். 

    பாமக தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட பாமக தனித்துதான் போட்டியிட்டது என அன்புமணி கூறினார். 

    அதே சமயம், பொருளாதார அடிப்படையில் 10 % இட ஒதுக்கீடு அளித்திருப்பது ஏற்புடையதாக இல்லை என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    மேலும் மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாள்புரம், குதிரைக்குத்தி, வேட்டங்குடி, நெய்தவாசல் பகுதிகளில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு அன்புமணி ஆறுதல் கூறினார்.

    pmk mayiladuthurai

    ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் – பாமக தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....