Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅமராவதி கொலை வழக்கு - என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

    அமராவதி கொலை வழக்கு – என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

    மராட்டிய மாநிலம் அமராவதியில் மருந்தக உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் என்ஐஏ காவலில் எடுத்துள்ளது.  

    பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவுகளை பகிர்ந்ததால் மகாராடிரா மாநிலம் அமராவதியில் மருந்தக உரிமையாளர் உமேஷ் பிரஹலாத்ராவ் கடந்த மாதம் 21-ம் தேதி கொலை செய்யப்பட்டார். 

    இந்தக் கொலை வழக்கில், காவல் துறையினர் 7 பேரைக் கைது செய்தனர். இந்நிலையில், இந்த ஏழு பேரும் அமாராவதி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து 7 பேரையும் நான்கு நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

    நீதிமன்றத்தின் அனுமதியை அடுத்து, 7 பேரும் என்ஐஏ எனப்படும் தேசிய புலானாய்வு முகமை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு இந்த 7 பேரும் ஜூலை 8-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இதற்கு முன்பு, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி கடந்த மாதம் 28-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் டெய்லர் கண்ணையா லால் என்பவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    சமூகத்தின் துணையின்றி நீதித்துறை இயங்காது – நீதிபதி ஜே.பி.பார்திவாலா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....