Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்படப்பிடிப்பின்போது அமிதாப் பச்சனுக்கு நேர்ந்த விபத்து.. தசைநார் கிழிந்தது

    படப்பிடிப்பின்போது அமிதாப் பச்சனுக்கு நேர்ந்த விபத்து.. தசைநார் கிழிந்தது

    ஐதராபாத்தில் நடைபெற்ற ப்ராஜெக்ட் கே படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய அளவில் முக்கிய நட்சத்திரங்களில் ஒன்றாக இருப்பவர் அமிதாப் பச்சன். இவர் ‘ப்ராஜெக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்து வரும் படம்தான் ப்ராஜெக்ட் கே. ரூ.500 கோடி எனும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதரபாத்தில் நடைபெற்று வந்தது. 

    இதில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இப்படப்பிடிப்பின் போது, நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தினால் அவருக்கு வலது விலா எலும்பு முறிவு மற்றும் தசை நார் கிழிந்துள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் தற்போது மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுக்க வீடு திரும்பியிருக்கிறார். 

    மேலும், அமிதாப் பச்சன் காயமடைந்ததையடுத்து ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ப்ராஜெக்ட் கே படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    தன்னையே கலாய்த்துக்கொண்ட வாரிசு பட தயாரிப்பாளர்; வீடியோ வைரல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....