Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துணிவு திரைப்படத்தின் படப்படிப்பு முடிந்ததா? அஜித்குமாரின் அடுத்த கட்ட ப்ளான் என்ன?

    துணிவு திரைப்படத்தின் படப்படிப்பு முடிந்ததா? அஜித்குமாரின் அடுத்த கட்ட ப்ளான் என்ன?

    நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் படப்படிப்பு முடிந்துள்ள நிலையில், ஏகே-62 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அஜித்குமார் துணிவு திரைப்படத்தில் நடித்துவந்தார்.

    துணிவு திரைப்படத்தின் படப்படிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியரும் நடித்து வருகிறார். துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக கூடும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

    இதையும் படிங்க: மேட்டூர் அணை அப்டேட்…பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறப்பா?

    இப்படியாக அஜித்குமார் நடிக்க உள்ள 62- வது திரைப்படத்தினைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி அஜித்குமார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாகவே, நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இத்திரைப்படத்திற்கு ஏகே-62 என்றும் பெயரிடப்பட்டது. 

    இந்நிலையில், விரைவில் ஏகே-62 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது, நடிகர், நடிகையர்களின் தேர்வு மும்மரமாக சென்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ஏகே-62 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும், இத்திரைப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....