Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்2026ல் தான் மதுரை எய்ம்ஸ் பணி முடியும்! தாமதத்திற்கு காரணம் சொன்ன மத்திய இணையமைச்சர்

    2026ல் தான் மதுரை எய்ம்ஸ் பணி முடியும்! தாமதத்திற்கு காரணம் சொன்ன மத்திய இணையமைச்சர்

    2026-ம் ஆண்டுக்குள் மதுரையில் எயம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். 

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் 2 நாள் சுற்றுப்பயணமாக தருமபுரி வந்தார். பாரதிய ஜனதாவின் மண்டல கூட்டங்களில் அவர் பங்கேற்றார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

    அப்போது அவர் கூறியதாவது :

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் கோவிட் தொற்று பரவல் காரணமாக தடைப்பட்டது. மத்திய அமைச்சரவை இதற்காக நிதியை ஒதுக்கியது. இப்போது மறு மதிப்பீடு செய்யப்பட்டு, தற்போது 1977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

    இதற்கான ஒப்பந்த புள்ளி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்.பி.பிஎஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று, வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டுக்குள் மதுரையில் எயம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும் 

    இதையும் படிங்க: ‘முஸ்லீம் மக்கள் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறோம்’ – ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி

    இவ்வாறு பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார். 

    மேலும், ‘தமிழக அரசு மத்திய அரசு நிதியில் ஒதுக்கும் திட்டங்களில் பிரதமர் படத்தையும், மத்திய அரசு சின்னங்களையும் வெளியிடுவதில்லை. மேலும், சுகாதார திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வெளியிடப்படும் விளம்பரங்களில் மத்திய அரசு நிதி என்றும் குறிப்பிடப்படவில்லை. பாரத பிரதமரின் புகைப்படமும் இடம்பெற வில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும்’ எனவும் மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....