Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அதிரவைக்கும் 'வாரிசு' பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்..

    அதிரவைக்கும் ‘வாரிசு’ பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்..

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் ரீலிஸாகி 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது.

    இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான், வாரிசு. தில் ராஜூ தயாரித்திருந்த இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வாரிசு கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.

    இருப்பினும், வாரிசு திரைப்படத்தின் வசூல் துளியும் பாதிக்கப்படவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, வாரிசு திரைப்படம் ரீலிஸாகி 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய்யின் ரசிகர்கள் இந்தச் செய்தியை சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக, வாரிசு படத்தின் வெற்றிவிழாவை நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழு கொண்டாடியது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. 

    தமிழகத்தில் இன்னும் பெரும்பான்மையான திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதால் 300 கோடி வசூலை அடுத்த வாரத்தின் இறுதிக்குள் அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஐஸ்வர்யா ராய்க்கு பதில் நான் தான் அப்படத்தில் நடிக்க வேண்டியது – ‘துணிவு’ நாயகி பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....