Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துணிவு ரிலீஸ் ஆகுதுனு சொன்னப்போ....நடிகர் விஜய் ரியாக்‌ஷன் இதுதானா?

    துணிவு ரிலீஸ் ஆகுதுனு சொன்னப்போ….நடிகர் விஜய் ரியாக்‌ஷன் இதுதானா?

    துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதையொட்டி நடிகர் விஜய் கூறிய செய்தியை சக நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

    விஜய் – அஜித்குமார் இருவரும் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறிவிடுகிறது. 

    இவர்கள் இருவரின் திரைப்படமும் வெவ்வேறு நாளில் தனித்தனியாக வெளியாகும் நாளே திருவிழா கோலம் புகும் என்றால், இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானால் அது திருவிழாக்களின் திருவிழா. 

    தற்போது, வாரிசு என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க, தில் ராஜூ தயாரிக்கிறார். அதேபோல, அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. 

    இந்த இரு திரைப்படங்களும் 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வரும் நடிகர் ஷ்யாம் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

    அதாவது, துணிவு படம் ரிலீஸ் அறிவிப்பு வெளியான போது, விஜய்யை அழைத்து துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாவதை நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார். அப்போது, நடிகர் விஜய்..எந்த பதற்றமுமின்றி ‘ஹே.. ஜாலி பா.. வரட்டும் பா.. நம்ம நண்பர் தானே.. அந்த படமும் நல்லா போகட்டும், நம்ம படமும் நல்லா போகட்டும்’ என்று கூறியதாக ஷ்யாம் தெரிவித்துள்ளார். 

    நடிகர் ஷ்யாம் இந்த சுவாரஸ்யத்தை சொல்லும் காணொளியானது சமூகவலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 

    ‘நான் டீசன்டான ஆளு’ – தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் வடிவேலு..குஷியில் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....