Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமாரின் 30 வருட திரைப்பயணத்தில் மென்மையான ஒரு கதை!

    அஜித்குமாரின் 30 வருட திரைப்பயணத்தில் மென்மையான ஒரு கதை!

    “ஆக்‌ஷன், டான், மீட்பர் போன்ற பல கதாப்பாத்திரங்களில் அஜித்குமார் நடிப்பது குதூகலமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவ்வபோது இப்படியான மென்மையான திரைப்படங்களிலும் அஜித்குமார் நடிக்க அதைக்காண பலர் காத்திருக்கின்றனர்’’

    எந்த ஒரு துறையாக இருந்தாலும், அத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நிலைத்திருப்பது என்பது சாதரணமான விடயம் அல்ல. அதிலும், திரைத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்திருப்பது என்பது பெரும் சவால் என்றே கூறலாம். 

    1990-ம் ஆண்டு வெளிவந்த ‘என் வீடு என் கணவர்’ எனும் திரைப்படத்தில் அஜித்குமார் சிறுவேடத்தில் நடித்திருப்பார். அதன்பின், 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி அமாராவதி திரைப்படத்தில் நடிக்க அஜித்குமார் ஒப்பந்தமானார். அதன்பின்பு, ஏறத்தாழ ஒராண்டுக்குப் பிறகே (1993 ஜூன் 4) அஜித்குமார் கதாநாயகனாக நடித்த ‘அமாரவதி’ திரைப்படம் திரைக்கு வந்தது.

    அன்றிலிருந்து, இன்று வரை திரைத்துறையில் 30 ஆண்டுகளாக அஜித்குமார் பயணித்துள்ளார். இந்தப் பயணத்தில் பல்வேறு சவால்களை திறம்பட மேற்கொண்டு, படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக அஜித்குமார் உள்ளார். 

    தற்போது, நடிகர் அஜித்குமாரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், திரையரங்குகள் விழாக்கோலமாகிறது. ரசிகர்கள் உற்சாக நிலைக்குச் செல்கின்றனர். நடிகர் அஜித்குமார் தனது கதாப்பாத்திரங்களின் வழியே, ஆக்‌ஷன், மாஸ், எமொஷனல் என தற்போது வலம் வந்துக் கொண்டிருக்கிறார். 

    இப்படியான சமயத்தில் பலரும் கொண்டாடும் அஜித்குமாரின் திரைப்படங்களில், பலரும் மறந்துப்போன ஒன்றை, இப்படியாக அஜித்குமார் நடித்திருக்கிறாரா என்ற எண்ண ஓட்டத்தை எழுப்பிக்கும் வகையில் திரைப்படம் ஒன்றுள்ளது. 

    கடந்த சில வருடங்களாக பெரும்பாலும் ஆக்‌ஷன் கதாநாயகனாக வலம் வரும் அஜித்குமார், மிகவும் மென்மையான திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதை தற்காலத்தில் பலரும் மறந்துவிட்டனர் என்று சொன்னால் அது மிகையாகாது. தற்காலத்தில் புதிதாக உருவாகியுள்ள பல அஜித்குமார் ரசிகர்களுக்கு அவரின் மென்மையான திரைப்படங்கள் தெரிவதென்பது கேள்விக்குறிதான்.

    மென்மையாக, எதார்த்தத்திற்கு மிக அருகில் இருந்தபடி பல திரைப்படங்களில் அஜித்குமார் நடித்திருந்தாலும், ஒரு திரைப்படம் பலரையும் எளிதில் தன்னுடன் கணெக்ட் செய்யும் வித்தையை நிகழ்த்தியது; நிகழ்த்திய வண்ணம் உள்ளது; நிகழ்த்திய வண்ணமே இருக்கும். அப்படியான ஒரு திரைப்படம்தான் முகவரி!

    இத்திரைப்படத்தில் அஜித்குமாரின் கதாப்பாத்திரத்தின் பெயர், ஶ்ரீதர். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத இயல்பாக தனது கனவை தூரத்திக்கொண்டு செல்லும் இளைஞனாக அஜித்குமார் நடித்திருக்கும் விதம் சிறப்பு. ஒரு முன்னணி நாயகன் இப்படியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது எப்போதும் அவர் ரசிகர்கள் பெருமைப்படக் கூடிய ஒன்றுதான். 

    கனவின் மீதான ஏக்கத்தினை வெளிப்படுத்துவதிலும், இளைஞனாக துவண்டுப்போய் இருக்கும் இடத்திலும், கனவினை தூரத்தும் வீரியத்திலும், குடும்ப சூழல்களால் கலங்கும் இடத்திலும், தனது நடிப்பால் நம்மையும் உருகச்செய்வார், அஜித்குமார். மேலும், பல இளைஞர்களின் பிரதிபலிப்பாகவும் அஜித்குமார் முகவரி திரைப்படத்தில் இருப்பார்.

    நாயகன் என்பவன் குறைகளற்றவன் என்பதை ஶ்ரீதர் கதாப்பாத்திரம் சுக்குநூறாக உடைத்திருக்கும். நாயகன் என்பவனும், சாதாரணமானவன்தான் என்றும், அவனுக்கும் உதவிகள் தேவைப்படும், அவனுக்கும் உந்துசக்தி தேவை, அவன் வெற்றிகளை மட்டுமே அடைய மாட்டான் என பல பிம்பங்களை முகவரி திரைப்படத்தின் ஶ்ரீதர் கதாப்பாத்திரம் நம்மிடம் விதைத்திருக்கும். 

    வளர்ந்து வந்த அக்காலக்கட்டத்தில் ஶ்ரீதர் மாதிரியான ஒரு கதாப்பாத்திர வடிவமைப்பை அஜித்குமார் தேர்வு செய்தது என்பது வியப்புக்குரிய ஒன்றுதான். இந்தத் திரைப்படத்தில் இருக்கும் அஜித்குமாரை அனைவரும் ஒரு படி மேலாகவே நேசிப்பர். 

    முற்றிலுமாய் மாறுபட்ட அஜித்குமாரை நீங்கள் முகவரி திரைப்படத்தில் காணலாம்! ஆக்‌ஷன், டான், மீட்பர் போன்ற பல கதாப்பாத்திரங்களில் அஜித்குமார் நடிப்பது குதூகலமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவ்வபோது இப்படியான மென்மையான திரைப்படங்களிலும் அஜித்குமார் நடிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே-62 திரைப்படம் மென்மையானதாக இருக்கும் என்ற தகவல்கள் பல கசிந்த வண்ணம் உள்ளன. ஏகே-62 திரைப்படம் அப்படியாக இருப்பின் அது கூடுதல் சந்தோஷமே! 

    ‘எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்

    பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்’

    ஆகஸ்ட் 2 -ல் இணையத்தை கலக்கிய பாபநாசம் திரைப்படத்தின் மீம்ஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....