Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நான்காண்டு உழைப்பு எல்லாம் வீணா? 100 கோடி தியாகம் செய்யும் ஆமிர்கான்

    நான்காண்டு உழைப்பு எல்லாம் வீணா? 100 கோடி தியாகம் செய்யும் ஆமிர்கான்

    ‘லால் சிங் சத்தா’ திரைப்படத் தோல்வியால், அத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட நடிகர் ஆமிர்கான் தனது ஊதியத்தை விட்டுத்தருவதாக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான், ஃபாரஸ்ட் கம்ப். 1994-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்திருப்பார். இத்திரைப்படம், ஃபாரஸ்ட் கம்ப் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது. 

    துயரத்தின் பிடியில் நாம் சிக்கியுள்ளபோது, வாழ்வின் மீது பிடிப்பே இல்லாத போது உத்வேகத்தை அளிக்கும் வகையில், மனதை இலகுவாக்கும் வகையில் ஃபாரஸ்ட் கம்ப்  திரைப்படம் இருப்பதாக உலகம் முழுவதும் பலராலும் கூறப்பட்டு வருகிறது. 

    இப்படியான சிறப்பம்சத்தைக் கொண்ட ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தை, இந்தி மொழியில் மறுஉருவாக்கம் செய்தனர். இத்திரைப்படத்துக்கு ‘லால் சிங் சத்தா’ என்று பெயர் வைத்துள்ளனர். ஆமீர்கான் இத்திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இந்தி மொழியில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டாலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இத்திரைப்படம் மொழியாக்கம் செய்யப்பட்டது. 

    மேலும், கடந்த மாதம் (ஆகஸ்ட் – 11) ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்யவில்லை. லால் சிங் சத்தா திரைப்படத்தின் தொடக்க கட்ட புரோமஷன் பணிகளில் இருந்தே, இத்திரைப்படத்தை புறக்கணிப்போம் என்று சமூகவலைதளங்களில் பல குரல்கள் எழுந்தன. இக்குரல்கள் திரைப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 

    இந்நிலையில், ஆமிர்கான் தற்போது ஒரு முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, லால் சிங் சத்தா திரைப்படத்தின் தோல்வி ஆமிர்கானை மிகவும் பாதித்துள்ளது. ஆதலால், படத்தயாரிப்பாளருக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தனது ஊதியத்தை விட்டுத்தர ஆமிர்கான் முடிவு செய்துள்ளார் என்றும், இதுவரை இப்படத்தில் நடித்தற்காக ஆமிர்கான் பணம் எதுவும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படியே ஆமிர்கான் தனது ஊதியத்தை தியாகம் செய்யும் பட்சத்தில் இப்படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு குறைந்தபட்ச இழப்பே ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

    இத்திரைப்படத்திற்காக ஆமிர்கான் நான்கு ஆண்டுகள் தனது உழைப்பை தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....