Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆதின மடங்களுக்கு ஆர்.டி.ஐ. சட்டம் பொருந்தாது - உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ஆதின மடங்களுக்கு ஆர்.டி.ஐ. சட்டம் பொருந்தாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ஆதின மடங்களுக்கு ஆர்டிஐ சட்டம் பொருந்தாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

    தருமபுரம் ஆதீனமான சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவில், “தமிழகத்தில் உள்ள பழமையான ஆதீன மடங்களில் தங்கள் தருமபுரம் மடமும் ஒன்று. இந்த மடமானது தமிழக அரசிடமிருந்து எந்தவொரு உதவியும், நிதியும் பெறாமல், சொந்த நிதியில் மட்டுமே இயங்கி வருகிறது. 

    சிலர் ஆதீன மடம் குறித்த விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளனர். ஆகவே, ஆதீன மடங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வராது என உத்தரவிட வேண்டும்” என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஆதின மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்றும், அதன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க முடியாது என உத்தரவிட்டார். 

    மின்சாரம் தாக்கிய பசுவை காப்பாற்றிய மாமனிதர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....