Saturday, May 4, 2024
மேலும்
    Homeவானிலைஅரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாட்களில் வலுவிழக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதன் காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைவிட 16 சதவீதம் அதிகப்படியான மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை 856 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் இயல்பான மழை அளவு 736 மில்லி மீட்டர் ஆகும். 

    மாண்டஸ் புயல் வீசுவதற்கு முன்பு, இயல்பான மழை அளவைவிட 3 சதிவேதம் குறைவாகவே இருந்த நிலையில், தற்போது இயல்பான மழை அளவைவிட 16 சதவீதம் அதிகரித்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....