Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசாலையில் உலா வந்த கரடி; பீதியில் மக்கள்!

    சாலையில் உலா வந்த கரடி; பீதியில் மக்கள்!

    நீலகிரியில் பகல் நேரத்தில் சாலையில் உலா வந்த கரடியால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். 

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கடுமையான பன்னிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் நிலவிய வெயில் காரணமாக வனப்பகுதிகளில் இருந்து வந்த இயற்கை தாவரங்கள், செடி, கொடிகள் என அனைத்தும் கருகிய நிலையில் காணப்படுகிறது. அதே சமயம், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 

    தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வனப்பகுதியில் வாழும் விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியே வரும் சூழல் நிலவி வருகிறது. அப்படி வரும் விலங்குகள் குடியிருப்பு, சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உலா வருகின்றன. 

    இந்நிலையில், கோத்தகிரி அருகே இருக்கும் வள்ளுவர் நகர் பகுதியில் கிராமத்திற்கு செல்ல கூடிய சாலையில், கரடி ஒன்று உலா வந்துள்ளது. இதனை அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டி ஒருவர் தனது கைப்பேசி மூலமாக காணொளியாக பதிவு செய்துள்ளார். 

    பகல் மற்றும் இரவு நேரங்களில் இதுபோன்ற உலா வரும் வனவிலங்குகளை வனத்துறையினர் வாகன ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    அசாமில் நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....