நான் 7 வயதிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன் என கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பதிவு.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். கேரளத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரான இவர் ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் கூட சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சஞ்சு சாம்சன் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இது சம்பந்தமான வீடியோவை சஞ்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், “நான் 7 வயதிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன். அப்போது ஒருநாள் நான் ரஜினி சாரை அவர் வீட்டிற்கு போய் சந்திப்பேன் என பெற்றோரிடம் கூறியிருந்தேன். சுமார் 21 வருடங்களுக்கு பின் அந்த நாள் வந்துவிட்டது. தலைவர் என்னை சந்திக்க எனக்கு அழைப்பு விடுத்தார்” எனவும் சஞ்சு சாம்சன் பதிவிட்டுள்ளார்.
ஓடிடியில் பதான் எப்போது? வெளிவந்த தகவல்..