ஐஎம்டிபி தளம் வெளியிட்டுள்ள பிரபல இந்திய நடிகர்களின் பட்டியலில் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐஎம்டிபி – திரைத்துறையை பொறுத்தவரையில் மிக முக்கிய தளமாக விளங்கி வருகிறது. 2022-ஆம் ஆண்டு முடிவடைவதையொட்டி, இந்த தளமானது பிரபல இந்திய நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழ் நடிகர் தனுஷ் முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம், தி கிரே மேன், நானே வருவேன் போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தது.
ஐஎம்டிபி வெளியிட்டுள்ள பட்டியலில் தனுஷற்கு அடுத்து பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் இடம்பெற்றுள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராய் 3-ஆவது இடத்தையும், தெலுங்கு நடிகர் ராம்சரன் 4-ஆவது இடத்தையும், சமந்தா 5-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும், அந்த பட்டியலின் 6-ஆவது இடத்தில் ஹிருத்திக் ரோஷனும், 7-ஆவது இடத்தில் கியாரா அத்வானியும் உள்ளனர். இவர்களைத்தொடர்ந்து, 8-ஆவது இடத்தில் ஜூனியர் என்.டி.ஆர், 9-ஆவது இடத்தில் அல்லு அர்ஜூன், 10-ஆவது இடத்தில் கே.ஜி.எஃப் படத்தின் நாயகன் யஷ் ஆகியோர் உள்ளனர்.