Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்"நமது தெரு-நமது நகரம் - நமது எதிர்காலம்" தேர்தல் அறிக்கையை புத்தகமாக வெளியிட்டார் - அன்புமணி...

    “நமது தெரு-நமது நகரம் – நமது எதிர்காலம்” தேர்தல் அறிக்கையை புத்தகமாக வெளியிட்டார் – அன்புமணி ராமதாஸ்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.  கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்காக  அனல் பறக்க பிரச்சாரங்களை மக்களிடையே பரப்பி வருகின்றனர். 

    anbumani

    அன்புமணி ராமதாஸ் அவர்கள் நேற்று காஞ்சிபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது 7 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் வெள்ளம் வரும் என்றோம். இப்போது பார்ப்பது வெறும் டிரெய்லர் தான். இனிமேல் தான் மெயின் பிக்சர்  தெரியும் என்று சமீபத்தில் சென்னையில் மழை பெய்து வெள்ளம் வந்ததை சுட்டிக்காட்டி பேசினார். இவருடைய இந்த பஞ்ச் டயலாக்குகள் மக்கள் வெகுவாக கைதட்டி ரசித்தனர். கைதட்டி  இந்த கழக ஆட்சி தொடர்ந்து நீடித்து வந்தால் சென்னை இதுவரை காணாத வெள்ளத்தில் மிதக்கும் என்று கூறினார்.   மேலும் நீட் விவாதத்திற்கு தான் தயாராக இருப்பதாக கூறினார்.

    ramadoss

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ‘ நமது தெரு-நமது நகரம் – நமது எதிர்காலம் ‘ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை பாமக கட்சி இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் புத்தகமாக வெளியிட்டார்.

    anbumani ramadoss speech

    மேலும் ஜனநாயகம் குறித்து இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை விரும்பி தமிழக மக்கள் அதனை தொடர்ந்து பகிர்ந்து  வைரலாக்கி வருகின்றனர். அதில் அவர் கூறியதாவது நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்ற ஜனநாயகத்தை விட உள்ளாட்சி ஜனநாயகம் வலிமையானது. இந்திய ஜனநாயகம் வலிமைப்படுத்த வேண்டும் என்றால், உள்ளாட்சியில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பது பாமக நிலைப்பாடு என்று ஜனநாயகத்தை குறித்து தம் கருத்தினை வெளியிட்டுள்ளார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாற்றம் படைப்போம் என்றும் கூறியுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....