பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், குர்பிரீத் கவுர் என்ற மருத்துவரை சண்டிகரில் இன்று மணக்க இருக்கிறார்.
முன்னணி நடிகராக இருந்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து தற்போது, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக உயர்ந்துள்ளவர் பகவந்த் மான் (வயது 48).
முதல்வர் பகவந்த் மான்னுக்கு ஏற்கனவே, இந்தர்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் சீரத் தில்ஷன் என 2 குழந்தைகள் பிறந்தது. பிறகு, இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர். தற்போது, இந்தர்பிரீத் கவுர் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குர்பிரீத் கவுர்(32) என்ற மருத்துவருக்கும், முதல்வர் பகவந்த் மான்னுக்கும் சண்டிகரில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்தத் திருமணத்தில் பங்கேற்க தில்லி முதல்வரும், ஆம் ஆத்மீ கட்சியின் தலைமை அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.