Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்ரூ.24.71 கோடி செலவில் 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், வளாகங்கள் திறப்பு : முதலமைச்சர்...

    ரூ.24.71 கோடி செலவில் 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், வளாகங்கள் திறப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.24.71 கோடி செலவில்
    கட்டப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும்
    ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 81 புதிய பொலிரோ வாகனங்களை வழங்கினார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (17.11.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவள்ளூர், சேலம், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.24.71 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

    தற்போது வரை 278 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு அதில் 199 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இரண்டு தளங்களுடன் கூடிய 17,324 சதுர அடி பரப்பளவு கொண்ட இக்கட்டடத்தில், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான அறைகள், பொறியியல் பிரிவிற்கென தனி அலுவலக இடம், கணினி அறை, எழுதுபொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்கசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இன்று முதல் விரைவு பேருந்துகள் இயக்கம்!

    அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டம் – எல்லாபுரம் ஒன்றியத்தில் 2 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவிலும், சேலம் மாவட்டம் – வாழப்பாடி ஒன்றியத்தில் 3 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி ஒன்றியத்தில் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவிலும், மற்றும் விளாத்திகுளம் ஒன்றியத்தில் 3 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் – கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 2 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம் – மோகனூர் ஒன்றியத்தில் 2 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்;திருவாரூர் மாவட்டம் – திருவாரூரில் 6 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் 28,716 சதுர அடி பரப்பளவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு அலுவலர்களுக்கான தனித்தனி அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடம்;என மொத்தம் 24 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களையும், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 24 மாவட்டங்களில் பணிபுரிந்துவரும் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் (சாலைகள் & பாலங்கள்), உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், உதவி இயக்குநர், உதவித் திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆகிய அலுவலர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்கு 6 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 81 பொலிரோ வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்ககால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....