Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்

    சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த சுதந்திர தின விழாவினை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.

    நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    பெரும்பாலும் தீவிரவாத தாக்குதலுக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்படும் இடம் விமான நிலையம் தான். எனவே, சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களைப் பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனா்.

    மேலும், வெடிகுண்டு நிபுணா்கள் உலோக உணர்வி (Metal Detectors) மூலம் அனைவரையும் பரிசோதனை செய்கின்றனர். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் வாகனங்களை வெடிகுண்டு நிபுணா்கள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனா்.

    சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனா். நுழைவு சீட்டு வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும், ஒரு முறை பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக, பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகள் உள்பட சோதனை செய்யப்படுகிறது. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையம் முழுவதும் முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். தற்போதைய, 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13,14,15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

    வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....