Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுன் விரோதத்தால் 4ம் வகுப்பு மாணவனை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியர்

    முன் விரோதத்தால் 4ம் வகுப்பு மாணவனை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியர்

    கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் முன் விரோதம் காரணமாக ஆசிரியை ஒருவரின் மகனை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கர்நாடக மாநிலம், ஹாட்லி கிராமத்தில் அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களாக முத்தப்பா மற்றும் கீதா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அதே பள்ளியில் ஆசிரியை கீதாவின் மகன் பரத், நான்காம் வகுப்பு படித்து வந்தார். 

    இந்நிலையில் ஆசிரியர் முத்தப்பா ஆசிரியை கீதாவை முன் விரோதம் காரணமாக, மண்வெட்டியால் தாக்கினார். இதனைப் பார்த்த கீதாவின் மகனான பரத், தனது தாயை காப்பற்ற சென்றார். அப்போது, ஆத்திரத்தில் இருந்த முத்தப்பா, சிறுவன் பரத்தை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு, அவனை தூக்கி மாடியில் இருந்து வீசினார். 

    இந்தக் கொடூர தாக்குதலில் சிறுவன் பரத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிறுவன் பரத்தை அருகில் இந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிறுவன் பரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவான ஆசிரியர் முத்தப்பாவை தேடும் பணி தொடங்கியுள்ளது.

    பிரான்ஸ் தோற்றாலும் ரசிகர்கள் மனதில் இடம்படித்த எம்பாப்வே; வைரலாகும் ட்விட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....