Tuesday, April 30, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதா? - சூப்பர்ஸ்டார் ஸ்பெஷல்!

    ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதா? – சூப்பர்ஸ்டார் ஸ்பெஷல்!

    எண்பதுகளில் மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பது திரைப்படங்களில் நடித்தார் ரஜினிகாந்த். ஆக்‌ஷன், காதல், குடும்பம், நகைச்சுவை என தனது திரைப்படங்களில் பல அம்சங்களும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். எண்பதுகளுக்குப் பிறகு, ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் வேகத்தை குறைத்துக்கொண்டார். அதாவது ஆண்டுக்கு இரு படம் ஒரு படம் என்ற அளவிலேயே நடித்தார். 

    ரஜினிகாந்தின் மாஸ் என்றவுடன் பலருக்கும் நினைவில் வரும் திரைப்படங்களில் முக்கியமானவற்றை தொண்ணூறுகளில் தான் ரஜினிகாந்த் தந்துள்ளார். தளபதி, அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்குத் தந்தார்.

    இத்தகைய தொடர் வெற்றித் திரைப்படங்களை தந்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் 2002-ம் ஆண்டு பாபா திரைப்படத்தின் வாயிலாக பெரும் சருக்கலை ரஜினிகாந்த் சந்தித்தார். இத்திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் கதை எழுத, அக்கதையை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். ஆனால், பாபா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அதுமட்டுமல்லாது, பல இன்னல்களுக்கு பாபா திரைப்படம் வெளிவந்த சமயத்தில் ரஜினிகாந்த் உள்ளானார். திரையுலகத்தில் மட்டுமல்லாது பொதுமக்களில் சிலரும் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பேச ஆரம்பித்தனர். 

    ஆனால், இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் பாபாவுக்குப் பிறகு அமைதியாக இருந்தபடியே மூன்று ஆண்டுகள் கழித்து ‘இது எப்படி இருக்கு’ என்ற 16 வயதினிலே பரட்டையின் வசனத்தை சந்திரமுகி திரைப்படத்தின் வாயிலாக  பேசினார்.

    ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து திரையரங்குகளில் சந்திரமுகி வெற்றிகரமாக ஓடியது. சந்திரமுகியின் வெற்றி,  ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

    சந்திரமுகிக்குப் பிறகு, சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம்தான் சிவாஜி. இத்திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்திய திரையுலகமே இத்திரைப்படத்தை கொண்டாடியது. இதற்கு மேல் ஒரு திரைப்படத்தை ரஜினிகாந்தால் தர முடியாது என்கிற கருத்து உருவெடுத்தது. 

    அப்படி உருவெடுத்த கருத்துகளை ஊதினால் பறந்துப் போகும் தூசிகள் போல, எந்திரன் திரைப்படத்தால் புறந்தள்ளினார் ரஜினிகாந்த். இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இந்திய திரையுலகமே வியந்து பார்த்தனர். சிட்டி எனும் ரோபோவாகவும் ,வசீகரனாகவும் ரஜினிகாந்த் நடித்த விதம் பல்வேறு தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்தது. 

    எந்திரனுக்குப் பிறகு, ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அச்சமயத்தில், பலரும் ரஜினிகாந்தின் உடல்நிலை சரியாக வேண்டிக்கொண்டனர். பலர் கடவுள்களை வழிபட்டனர்.  ரஜினிகாந்தின் ரசிகர்கள் இச்சூழலில், மிகவும் மனதளவில் உடைந்துப் போயிருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

    இப்படியான சூழலில்தான் ரஜினிகாந்த் உடல்நிலை தேறிவருகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த நடித்த முதல் திரைப்படம் கோச்சடையான். எந்திரனுக்குப் பின்பு ஏறத்தாழ நான்கு வருடங்கள் கழித்து வெளியான திரைப்படம் இதுவாகும். Motion Capture முறையில் உருவான இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும், இத்திரைப்படத்தின் முயற்சிக்குப் பல்வேறு பாராட்டுகள் படக்குழுவுக்கு குவிந்தது. 

    அதே ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் மற்றொரு திரைப்படம்தான், லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த லிங்கா. படையப்பா, முத்துவைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் கே.எஸ்.ரவிகுமாரும் இணையும் திரைப்படம்,  4 ஆண்டுகளுக்கு பிறகு, இயல்பான பாணியில் ரஜினிகாந்த நடிக்கும் திரைப்படம், ஏ.ஆர்.ரகுமான் இசை என லிங்கா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது உச்சத்தை அடைந்துகொண்டே சென்றது. 

    ஆனால், இந்த எதிர்பார்ப்பை லிங்கா திரைப்படம் பூர்த்தி செய்யாமல் போக, மீண்டும் ஒரு தோல்வி திரைப்படத்துக்கு சொந்தக்காரர் ஆனார் ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாமல், லிங்கா திரைப்படம் பல கேளிக்கைகளுக்கும் உள்ளானது. 

    ‘கெட்ட பையன் சார் இந்த காளி’ -இன்றும் கொண்டாடப்படும் ரஜினியின் வசனங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....