Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉயிர்த்தியாகம் செய்த தந்தை; 20 ஆண்டு போராட்டத்துக்குப் பின் ராணுவத்தில் சேர்ந்த மகள்!

    உயிர்த்தியாகம் செய்த தந்தை; 20 ஆண்டு போராட்டத்துக்குப் பின் ராணுவத்தில் சேர்ந்த மகள்!

    தந்தை ராணுவத்தில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த நிலையில், மகள் ராணுவத்தில் இணைந்துள்ள சம்பவம் பேசுபொருளாய் ஆகியுள்ளது. 

    ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர், நவ்நீத் வாட்ஸ். இந்திய ராணுவப் பணியில் மேஜர் எனும் பொறுப்பில் பணியாற்றிய இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர் இறக்கும்போது, இவரது மகளுக்கு 2.5 வயது. 

    தனது தந்தையின் முகம் கூட நினைவில் இல்லாமல்தான் மகள் இனயத் வாட்ஸ் வளர்ந்தார். தனது தந்தையை போலவே தானும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீராத முயற்சி எடுத்த இனயத் வாட்ஸ், அதற்காக கடினமாக உழைத்தார். 

    அந்த உழைப்பின் பலனாக, இனயத் வாட்ஸ் தற்போது ராணுவ அதிகாரியாக உருவெடுத்துள்ளார். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த நவ்நீத் வாட்ஸின் மகள், தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றவுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இனயத் வாட்ஸ் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் வரும் ஏப்ரல் மாதம் ராணுவ பயிற்சிக்காக இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; 195 பேர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....