Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபப்ஜி விளையாட விடவில்லை என்பதற்காக தாயின் உயிரை எடுத்த சிறுவன்; நடந்தது என்ன?

    பப்ஜி விளையாட விடவில்லை என்பதற்காக தாயின் உயிரை எடுத்த சிறுவன்; நடந்தது என்ன?

    கிழக்கு லக்னோவில் 16 வயதுடைய சிறுவன் பப்ஜி என்னும் ஆன்லைன் விளையாட்டினை விளையாடுவதற்கு தடுத்ததால், தனது அன்னையினை சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

    பப்ஜி என்னும் பிரபலமான ஆன்லைன் விளையாட்டானது இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் பெரும்பாலான இளைஞர்களாலும், சிறுவர்களாலும் விளையாடப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த இந்த விளையாட்டிற்கு பெரும்பாலானோர் அடிமையாகி வருகின்றனர்.

    இந்தவிளையாட்டில் தொடர்ந்து தோற்று வருவதால் ஏற்படும் மன உளைச்சல்களால் தற்கொலை செய்து கொள்ளுதல், அதிக நேரம் விளையாடுவதால் ஏற்படும் மன அழுத்தத்தினால் நிகழும் மரணங்கள் என சமீப காலத்தில் பல சம்பவங்கள் உலகெங்கும் நிகழ்ந்துள்ளன.

    சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில், பப்ஜி போன்றே மிகப் பிரபலமான விளையாட்டான ஃப்ரீ ஃபையர் எனப்படும் விளையாட்டின் கடவுச்சொல்லினை நண்பர்கள் திருடியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த நிலையில், தற்போது லக்னோவில் நடந்துள்ள இந்த சம்பவம் தற்காலத்து மாணவர்களின் மனநிலை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாய் மாறியுள்ளது.

    இந்த சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர் பப்ஜி விளையாட்டிற்கு தடை செய்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியினைக் பயன்படுத்தி இந்த கொலையினை செய்துள்ளார் என்பதினைக் கண்டறிந்துள்ளனர்.

    இந்த சம்பவமானது சனிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அந்த சிறுவனிடம் விசாரித்த போது அவன் புனைக் கதைகளை கூறியதாகவும், இந்த கொலையினை ஒரு மின்சார ஊழியர் செய்ததாகவும் கூறியதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி விசாரணைக்காக அந்த சிறுவனை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.  

    பப்ஜி, ஃப்ரீ ஃபையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறுவர்களும், இளைஞர்களும் பலியாகும் நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு வேலைக்குச் செல்வோரும், பெண்களும் கூட அடிமையாகி வருகின்றனர். ஆன்லைன் மோகத்தினால் கவரப்பட்டுள்ள வருங்கால சந்ததியினரை ஒரு பெரும் ஆபத்து சூழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதலா; என்ன நடக்கப்போகிறது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....