Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்எந்த நேரத்திலும் 1லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படலாம்: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    எந்த நேரத்திலும் 1லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படலாம்: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் நீர் மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் ஏற்கனவே திறக்கப்பட்டு வரும் நீரின் அளவில் இருந்து அதிகப்படியான நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

    120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணைக்கு நாளுக்கு நாள் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் ஆணை நிரம்பியுள்ளது என்று நீர்வளளத்துறை அதிகாரிகள் ,அன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீரை திறந்துவிட்டனர் .

    பிறகு 13-ஆம் தேதி அதே 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு 23 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்த்தப்பட்டது .இந்த நிலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் முழு கொள்ளளவை எட்டிய அணையில் இருந்து நேற்று (14-ஆம் தேதி ) ஒருபுறம் 45,000 கனஅடி நீர் திறந்து விடப்பட ,இன்னொரு புறம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை அதிகமாக பெய்துவருவதை அடுத்து அணைக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் வர ஆரம்பித்துள்ளது.

    இதனால் அணையில் இருந்து 60,000 கனஅடி தண்ணீரை திறந்துவிட அதிகாரிகள் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது அணையின் பாதுகாப்பு கருதி 1,10,000 கன அடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எந்த நேரத்திலும் அணையில் இருந்து அதிகபடியான நீர் திறக்கப்படும் என்பதால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ‘உயிர் சாவில் முடிவதில்லை, கலை சாவை மதிப்பதில்லை’-ஹாரிபாட்டர் நடிகரின் மறைவால் உருகும் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....