Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்காங்கிரஸ் யூடியூப் சேனல் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

    காங்கிரஸ் யூடியூப் சேனல் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

    காங்கிரஸ் யூடியூப் சேனல் நேற்று (ஆகஸ்ட் 24) புதன்கிழமை திடீரென நீக்கப்பட்டது. 

    காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பூர்வ யூடியூப் சேனல் நேற்று (ஆகஸ்ட் 24) புதன்கிழமை திடீரென நீக்கப்பட்டது. 

    காங்கிரஸ் யூடியூப் சேனல் நீக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், இதற்கு தொழில்நுட்பக் கோளாறு அல்லது நாசவேலை காரணம் என விசாரணை நடத்தி வருகிறோம் என்றும், காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், காங்கிரஸ் யூடியூப் சேனல் நீக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதுகுறித்து, காங்கிரஸ் கட்சி அதிகாரப் பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட பதிவில், “எங்கள் யூடியூப் சேனல் – இந்திய தேசிய காங்கிரஸ் எனும் எங்களது யூடியூப் சேனல் நீக்கப்பட்டுள்ளது. நாங்களும் அதை சரிசெய்து வருகிறோம். கூகுள் மற்றும் குழுக்களுடன் தொடர்பில்  உள்ளோம். 

    மேலும், இதற்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறா அல்லது நாசவேலையா என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் திரும்பி வருவோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....