Monday, April 29, 2024
மேலும்
    Homeவானிலைதமிழகத்தின் ஏழு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

    தமிழகத்தின் ஏழு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

    சென்னை: அடுத்த 24 மணி நேரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக,

    அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    சென்னையை பொறுத்தவரையில், 

    அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.  

    கடந்த 24 மணி நேரத்தில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 23 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.  

    இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    பாகிஸ்தானில் வெள்ளம்- பலி எண்ணிக்கை உயர்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....