சென்னை மெட்ரோ ரயிலில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான்,வாரிசு. இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
ரசிகர்களின் ஆர்வத்தை சமீபத்தில் விஜய் குரலில் வெளிவந்த ரஞ்சிதமே மற்றும் சிம்பு குரலில் வெளிவந்த தீ தளபதி பாடல் மேலும் அதிகரித்துள்ளது. வாரிசு திரைப்படத்தின் பொங்கல் வெளியீட்டை தொடர்ந்து தற்போது படக்குழு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
The Boss Returns 🔥
Chennai Metro Carries #Varisu 🚝🔥#Varisu in theatres near you from Pongal 2023 😊#Thalapathy @actorvijay @SVC_official @directorvamshi@iamRashmika @MusicThaman@Jagadishbliss #VarisuPongal 🔥 pic.twitter.com/uLdsSd0xiR
— Seven Screen Studio (@7screenstudio) December 12, 2022
திரையரங்குகளில் இப்போதே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதைச்சார்ந்த வீடியோவை வாரிசு படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.