Sunday, April 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு இசை வெளியீட்டு நிகழ்வின்போது தள்ளுமுள்ளு; வெளிவந்த வீடியோ!

    வாரிசு இசை வெளியீட்டு நிகழ்வின்போது தள்ளுமுள்ளு; வெளிவந்த வீடியோ!

    வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது, நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு திரைப்படத்தின் புரோமஷன் பணிகள் தொடங்கியுள்ளது. 

    மேலும், வாரிசு திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் சூல் ஆஃப் தி வாரிசு போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படியே, இன்று இசை வெளியீட்டு விழாவானது தற்போது சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. 

    இசை வெளியீட்டு விழாவின் போது, நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயற்சி செய்யும்போது காவல்துறையினருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது சமந்தமான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை- சென்னை வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....