Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துணிவு திரைப்பட அப்டேட்... புகைப்படங்களை கண்டு வியக்கும் ரசிகர்கள்

    துணிவு திரைப்பட அப்டேட்… புகைப்படங்களை கண்டு வியக்கும் ரசிகர்கள்

    நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளிவந்து இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. 

    நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் மூன்றாவது முறையாக நடிகர் அஜித்குமாரை இயக்கும் திரைப்படம்தான், துணிவு. இவர்களின் கூட்டணியில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் ‘துணிவு’ தரமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

    பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘துணிவு’ திரைப்படம் குறித்து அவ்வபோது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், துணிவு திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

    திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் துணிவு திரைப்படத்தின் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, அஜித்குமாரின் லுக்கை பெருமையாகப் பேசி வருகின்றனர். புகைப்படங்கள் தொடர்ந்து, சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. 

    சமீபத்தில், துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்த தகவலும், ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தில், துணிவு திரைப்பட நடிகை மஞ்சுவாரியர் ஒரு ராப் பாடலை பாடியுள்ள தகவலும் வெளிவந்தது. 

    துணிவு திரைப்படத்தை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளது. மேலும், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் பொங்கலன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கால்பந்து உலகக் கோப்பை; காலிறுதிக்கு தகுதிப் பெற்ற பிரான்ஸ்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....