Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரிலீஸாகும் முன்பே 190 கோடியா... துணிவு செய்யும் சாதனை - வெளிவந்த அப்டேட்

    ரிலீஸாகும் முன்பே 190 கோடியா… துணிவு செய்யும் சாதனை – வெளிவந்த அப்டேட்

    நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் 190 கோடிக்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம்தான், துணிவு. வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வைத் திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் – போனி கபூர்- அஜித்குமார் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது.

    இதனால், துணிவு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகளவில் உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், துணிவு திரைப்படத்தின் வியாபார தகவல்கள் வெளிவந்துள்ளது. துணிவு திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 160 கோடி என்றும், நடிகர் அஜித்குமாரின் சம்பளம் 70 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும், கேரளா உரிமை 2.5 கோடிக்கும், கர்நாடக உரிமை 3.6 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.

    இதுமட்டுமல்லாது, துணிவு திரைப்படத்தின் இந்தி உரிமை 25 கோடிக்கும், இசை உரிமை 2 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமைகள் 1.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, துணிவின் டிஜிட்டல் உரிமையை பொறுத்தவரை இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.65 கோடிக்கு வாங்கியுள்ளது. சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி 25 கோடிக்கு வாங்கியுள்ளது.

    துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் 14 கோடிக்கு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், துணிவு திரைப்படம் 193.60 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....