Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பையில் இந்திய அணி... நம்ம அணியோட ஆட்ட நேரங்களும் தேதிகளும் தெரியுமா?

    உலகக் கோப்பையில் இந்திய அணி… நம்ம அணியோட ஆட்ட நேரங்களும் தேதிகளும் தெரியுமா?

    இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கால அட்டவணை இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக உச்ச நிலையை அடைந்து வருகிறது. நாளை மறுநாள் 2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இந்த உலகக் கோப்பைப் போட்டியானது நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. 

    இந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

    மேலும், நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று நவம்பர் 13-ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் ஆட்டங்களின் தேதி மற்றும் நேரம் குறித்து இங்கே காண்போம். 

    இதையும் படிங்க: நீ என்ன கிறிஸ்டியனா.? கெட் அவுட் – செய்தியாளரிடம் மீண்டும் வரம்பு மீறி கோவப்பட்ட எச்.ராஜா!

    இந்திய நேரங்கள்;

    முதல் போட்டி – மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 23-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மதியம் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. 

    இரண்டாம் போட்டி – சிட்னி மைதானத்தில் அக்டோபர் 27-ம் தேதி இந்தியாவுக்கும், தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணிக்கும் இடையே மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது. 

    மூன்றாம் போட்டி – பெர்த் மைதானத்தில் அக்டோபர் 30-ம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே மாலை 4.30 மணியளவில் நடைபெறும். 

    நான்காம் போட்டி – அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 2-ம் தேதி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே மதியம் 1.30 மணியளவில் நடைபெறும். 

    ஐந்தாம் போட்டி – மெல்போர்ன் மைதானத்தில் நவம்பர் 6-ம் தேதி இந்தியா மற்றும் தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணிக்கு இடையே மதியம் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. 

    சிட்னி, அடிலெய்ட் நகரங்களில் நடைபெறும் அரையிறுதி மற்றும் மெல்போர்னில் நடைபெறும் இறுதி ஆட்டங்கள் மதியம் 1.30 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....