Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது உச்சநீதிமன்றத்தில் தெலுங்கானா அரசு ரிட் மனு தாக்கல்

    தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது உச்சநீதிமன்றத்தில் தெலுங்கானா அரசு ரிட் மனு தாக்கல்

    தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது உச்சநீதிமன்றத்தில் தெலுங்கானா அரசு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது. 

    தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தெலங்கானா அரசு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

    இது தொடர்பாக தெலங்கானா மாநில தலைமைச் செயலர் சாந்திகுமார் தாக்கல் செய்திருக்கும் மனுவில், தெலங்கானா முனிசிபல் திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். 

    ஆளுநர் சுயமாக செயல்படக் கூடாது என்பதை ஷம்சீர் வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தி இருப்பதாகவும், மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கும்போது, அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் அந்த மனுவில், ஆளுநரின் செயல்பாட்டை சட்ட விரோதமான, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என்று அறிவித்து, நிலுவையில் இருக்கும் மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தர ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த ரிட் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பத்து தல டீசர் எப்போது? – வெளிவந்த அப்டேட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....