Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காலா நடிகையுடன் நடனமாடும் ஷிகர் தவான்..ஆரம்பிக்கிறதா ஷிகர் தவானின் அடுத்த பயணம்?

    காலா நடிகையுடன் நடனமாடும் ஷிகர் தவான்..ஆரம்பிக்கிறதா ஷிகர் தவானின் அடுத்த பயணம்?

    கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் முதன்முறையாக திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

    ஹிந்தியில் ‘டபுள் எக்ஸ்எல்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் காலா, வலிமை படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஹூமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில், மங்காத்தா திரைப்பட புகழ் மகத் ராகேவேந்திராவும் நடித்துள்ளார். 

    இத்திரைப்படத்தில் பிரபல இந்நாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுக்கு கேப்டனாக செயல்பட்டு, தொடரையும் வென்றார். 

    இந்நிலையில்,  டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தில் ஷிகர் தவான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஹூமா குரேஷியும், ஷிகர் தவானும் நடனம் ஆடுவதுப்போன்ற புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும், டபுள் எக்ஸ்எல் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக, ஹர்பஜன் சிங், இர்பான் பதான் போன்றோர் தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....