Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மோடிக்கு ஆதரவாக சமந்தா பேச்சு - திடீரென வைரலாகும் வீடியோ!

    மோடிக்கு ஆதரவாக சமந்தா பேச்சு – திடீரென வைரலாகும் வீடியோ!

    நான் மோடியின் ஆதரவாளர் என சமந்தா பேசியிருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை சமந்தா தற்போது ‘யசோதா’, ‘சகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவர் பேசியுள்ள பழைய காணொலிகள் தற்போது சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளன. அப்படி ஒரு காணொலியில் சமந்தா பேசியிருப்பதாவது, நான் எப்பொழுதும் மோடிஜியின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பேசியிருக்கிறார்.

    இதைத்தொடர்ந்து மற்றொரு காணொலியில் சமந்தா, நான் மோடி ஆதரவாளர். மோடியின் தலைமையில் நாடு பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    சமந்தாவின் இந்த கருத்துக்கு ஆதரவும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. 

    இதையும் படிங்க  : பொதுமக்கள் முன்பு ஆட்சியரை வறுத்தெடுத்த சீதாராமன் – ரேஷன் கடையில் பரபரப்பு !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....